முக்கிய செய்திகள்
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: https://arasiyalsuriyan.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Video-2024-02-07-at-00.24.24_4d42ae19.mp4?_=1திருப்பூர் மாவட்டம் மாநகர வடக்கு (RTO) வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேலுமணி மீண்டும் புரோக்கர்களின் பிடியிலா?-October 11, 2023.
சில வருடங்களாக பணிமாறுதல் அடையாமல் நாற்காலியை நங்கூரமிட்டு இருந்தவர், சில வாரங்களுக்கு முன் கோவை மாவட்டத்திற்கு பணி மாறுதல் சென்றார். அந்த திருப்பூர் வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் காலியாகவே இருந்தது ஏன்? அதே இடத்திற்கு பணி மாறுதலில் சென்ற வேலுமணி இன்ச்சார்ஜ்ஜாக மீண்டும் வந்தது எதற்காக? திருப்பூர் மாவட்டத்தில் அதற்குரிய தகுதி வாய்ந்த போக்குவரத்து ஆய்வாளர்கள் இல்லையா?
பண மோசடியில் ஈடுபடும் புரோக்கர்களை ஒழித்து நற்பெயர் எடுப்பாரா?
அனைத்து ஆதார செய்திகளுடன் … விரைவில் …
திருப்பூர் மாநகர மாவட்டத்தில் சில நபர்கள் போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை(press id card) வைத்துக்கொண்டு ஹவாலா பணம் மோசடி- October 9, 2023.
திருப்பூர் மாநகர மாவட்டத்தில் சில நபர்கள் போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை(press id card) வைத்துக்கொண்டு ஹவாலா பணம் மோசடியில் ஈடுபடுகிறார்களாமே?!!…
எப்படி?…
என்று ஆச்சர்ய கேள்வி எழுப்புவோருக்கு அருமையான பதில்!!…
திருப்பூர் மாநகரத்தில், அரசு அனுமதி பெறாத சூதாட்ட கிளப்புகளில் பணம் இழந்து நிற்போரையும், கஞ்சா குடிப்பதற்கு பணம் இல்லாமல் காத்திருப்போரையும் பட்டியலிட்டு திருப்பூர் மாநகரத்தில் பத்திரிகையாளர் நிருபர் அடையாள அட்டை வைத்துள்ள சில போலியான நபர்கள் மேற்படி நபர்களை குறிவைத்து அவர்களுக்கு 10000, 20000 ஆயிரம் என ஊக்கத்தொகை வழங்கியும், பல வகையான பண மோசடி ஆசை காட்டியும் மேற்படி நபர்களுக்கு போலியான ஒரு அலுவலக முகவரியை தயார் செய்து ( Rental agreement ) மேற்படி அலுவலகத்தில் தாங்கள் பனியன் ஜட்டி விற்பதாகவும், டெரகோட்டா ஜுவல்லரி விற்பதாகவும் போலியான ஒரு GSTIN – யை உருவாக்கி, அதன் பெயரில் போலியான ஒரு வங்கி கணக்கையும் (Bank Account) உருவாக்கி மேற்படியான நபர்களின் கணக்கில் கோடிக்கணக்கில் ஹவாலா பணம் பரிமாற்றம்!
குறிப்பு!!…
மேற்படியான நபர்களுக்கும் பத்திரிகையாளர் அடையாள அட்டை போடப்பட்டுள்ளதாம்?
இந்த ஹவாலா பணம் பரிமாற்றத்திற்கு உறுதுணையாக திருப்பூர் மாவட்டத்தில் சில போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்துள்ள நபர்களும் உறுதுணையாம்!!!…
மேற்படியான நபர்களின் பட்டியலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து மேற்படியான நிருபர் என்ற பெயரில் சுற்றித் திரியும் நபர்களின் பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, மற்றும் ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, போன்றவற்றின் நகல்களையும், ஆதார் கார்டில் உள்ள முகவரியில் குடியிருக்கிறார்காளா ? என்பதனைப் பற்றிய முழு விவரங்களையும்,
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்கள் சோதனை செய்து அவர்களுக்கு உண்டான வங்கிக் கணக்கு, அவர்களின் வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனையின் பெயரில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள், அவர்களுடன் தொடர்புள்ள தொலைபேசி எண்கள் போன்றவற்றை ஆராய்ந்து,
மேற்படியான வரியைப் ஏய்ப்பு செய்ய திட்டமிடும் திருப்பூர் மாநகரத்தில் உள்ள போலி நிருபர்களின் பட்டியலை ஆராய்ந்து அவர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை வைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தால் மட்டுமே கோடிக்கணக்கில் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யும் போலி நிருபர்களை பற்றிய முழு தகவல்களும் கிடைக்கும் என்பதை திருப்பூர் மாநகரத்தில் உள்ள உண்மை நிருபர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு!!…
மேற்படியான நபர்களின் முழு விபரங்களும், போலியான GSTIN எண்களும் விரைவில் வெளியிடப்படும்!!!!
சேலம் கிழக்கு மாவட்ட தளபதி மு க ஸ்டாலின் அறிவாலயத்தில் 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்- October 7, 2023.

மண்மலை கிராமம் ரங்கநாதபுரத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் வேணுகோபால் என்பவரின் வீட்டில் திருட்டு- 30, September 2023.
கடந்த 19/9/2023 அன்று மண்மலை கிராமம் ரங்கநாதபுரம் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் வேணுகோபால் என்பவரின் வீட்டில் இரவு ஒரு மணி சுமார் அவரது வீட்டில் வேலை பார்த்த செந்தில் என்ற எலெக்ட்ரிசியன் 16 பவுன் நகைகளும் 2 கிலோ வெள்ளியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தையும் திருடியதாக புகார் அளித்ததன் பேரில் ஆத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு நாகராஜன் அவர்களின் தனிப்படை மற்றும் தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் தனிப்பிரிவு காவலர் சம்பத் ஆகியோர்கள் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்து ஆத்தூர் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்து அடைத்தனர். கெங்கவல்லி தாலுகா நிருபர் மஜார்.
திருப்பூர் மாவட்டத்தில் திரும்பும் இடமெல்லாம் போலி நிருபர்கள்-September 27, 2023.
திருப்பூர் மாவட்டத்தில் திரும்பும் இடமெல்லாம் பத்திரிக்கையாளர் எனக்கூறி ₹3000/-ரூபாய்க்கு பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை விலைக்கு வாங்கி நாளை 28.09.2023 (வியாழன்) மிலாடி நபி யை முன்னிட்டும் , *டாஸ்மாக் கடை விடுமுறையை முன்னிட்டும் போலி சரக்கு விற்கும் பார் உரிமையாளர்களை குறி வைத்து கடைக்கு ₹ 100/- ரூபாய் விசிட்டிங் கார்டு கொடுத்து வசூல் செய்ய திருப்பூர் மாவட்ட , மாநகரத்தில் உள்ள போலி நிருபர்கள் திட்டம். திருப்பூர் மாவட்ட, மாநகரத்தில் உள்ள மது விலக்கு காவல் நிலையங்களுக்கும், சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கும் இந்த விசயம் ( போலி சரக்கு விற்க திட்டம் தீட்டும் நபர்களை பற்றி ) தெரியாதா?!!…
திருப்பூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டும், எழுதப் படிக்கத் தெரியாத நபர்கள் போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டும், பத்திரிகையாளர் எனக்கூறி திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த நேரத்தை விட கூடுதலாக (Or) மறைமுகமாக மதுவிற்கும் நபர்களைப் பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் இருக்க நான் நிருபர் எனக்கு ஒர் ( பத்திரிக்கையாளர் என) விசிட்டிங் கார்டு கொடுத்தால் 100 ரூபாய் தர வேண்டும், எனவும் நான் ஐந்து நிருபர்களுடன் வந்திருக்கிறேன் ஆதலால் எனக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், கொடுக்கவில்லை என்றால் தங்கள் போலி மதுபானம் விற்கிறீர்கள், அரசு நிர்ணயித்த நேரத்தை பின்பற்றாமல் மதுபானம் விற்கிறீர்கள் !!…
என நான் போதை பொருள் தடுப்பு பிரிவு 10581 க்கு தொடர்பு கொண்டு புகார் செய்வேன் எனவும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு தகவல் கொடுப்பேன் எனவும் மிரட்டி பணம் பறிக்க முயலும் போலியான விசிட்டிங் கார்டு ( RNI இல்லாத ) போலி நிருபர்களை பற்றியும், திருப்பூர் மாநகரத்தில் செயல்படும் மதுபான கூடத்தில் மது விற்பனை செய்ய உறுதுணையாய் நிற்பவர்களை பற்றியும், அவர்களை அடக்க மறுக்கும், திருப்பூர் மாவட்ட / மாநகர, மது விலக்கு காவல்துறையினர் பற்றியும், முழு விபரங்களையும் IS Inteligence ஆய்வு செய்து முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, போலி டாஸ்மாக் சரக்கு விற்கும் நபர்கள் திருந்துவார்கள்!!!… தக்க ஆதாரங்களுடன் நாளை செய்தி வெளியிடுவோம்!!!.
இப்படிக்கு ,
விசிட்டிங் கார்டு நிருபர்களை ஒழிக்க பாடுபடும் உண்மை நிருபர்கள் ( மத்திய அரசு RNI பதிவு பெற்ற ).
சேலம் வாழப்பாடியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தனர்- September 14, 2023.
சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடியில் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயம் அரங்கத்தில் இன்று கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் தலைமையில் கெங்கவல்லி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகி சுமதி 100க்கும் மேற்பட்ட பெண்களை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம்,விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட துணை அமைப்பாளர் தங்கபாண்டியன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் முருகேசன்,சையது,செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை, செல்வகிளிண்டன்,ராஜேந்திரன்,அரவிந்த ராஜா,வெங்கடேஷ்,சந்துரு மற்றும் பெண்கள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர் அரசியல் சூரியன். கெங்கவல்லிதாலுகா நிருபர் மஜார்.
பல்லடத்தை தொடர்ந்து சென்னிமலையில் பயங்கரம்-September 9, 2023
பல்லடத்தை தொடர்ந்து சென்னிமலையில் பயங்கரம்…
திருப்பூர_மாவட்டத்தில் அதிகரித்து வரும் படுகொலைகள். சென்னிமலை அருகே இரட்டை கொலை, இது 3 வது இரட்டைகொலை என்பது குறிப்பிடதக்கது. ஒட்டன்குட்டை கரியாங்காட்டை சேர்ந்த விவசாயி முத்துசாமி கவுண்டர் (85) மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் (74). ஆகியோர் படுகொலை. ஊருக்கு அருகே தனியாக உள்ள வீட்டில் வசித்து வந்த இவர்கள் நேற்று இரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
30 வருடங்களுக்கு பிறகு ராசிபுரம் அருகே பெரியமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பட்டியலின மக்கள் சாமி தரிசனம்.. – September 7, 2023
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: https://arasiyalsuriyan.com/wp-content/uploads/2023/09/RASIPURAM-KOVIL-ISSUE-OPEN-NEWS.mp4?_=2நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட சென்ற முயன்றதாகவும் அப்போது மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தி கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காததால் இருதரப்பினர்களுக்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடந்த 3மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி காவல்துறையினர் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறு உத்தரவு வரும் வரை கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் பிரார்த்தனை செய்யவும்,எந்த ஒரு தரப்பினரும் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டியலினா மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழையாய் தாம்பூலத் தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகளுடன் நுழைய முயன்று உள்ளனர். நுழைய முயன்ற பட்டியலின மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோவில் முன்பு 3மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தினர் மற்ற தரப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து யாரும் வராததால் நீதிமன்ற உத்தரவின்படி கோவிலில் திறக்க முயன்றனர். கோவிலை திறப்பதற்கு சாதி இல்லாததால் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் அதிகாரிகள் கோவிலின் கேட் மற்றும்கருவறைன்bபூட்டை உடைத்து பட்டியலின மக்கள் சாமி தேங்காய் பழம் படைத்து தரிசனம் செய்தனர். 30 வருடங்களுக்குப் பிறகு பட்டியலின மக்கள் பெரிய மாரியம்மன் திருக்கோவிலிற்குள் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது…
உஷார்… மக்களே உஷார்…-September 6, 2023.
வருடத்திற்கு இரண்டு மற்றும் மூன்று முறை முப்பெரும் விழா, தொடக்க விழா, மகளிர் தின விழா என பல விழாக்களை நடத்தி அரசு அதிகாரிகளையும், வியாபாரிகளையும் மிரட்டி வசூலில் ஈடுபடும் வசூல் வேட்டை பத்திரிகை ஆசிரியர்கள்…. அழைப்பிதழின் முதல் பக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பதவியில் உள்ள அமைச்சர்களின் புகைப்படத்தை வைத்து போலியாக நலத்திட்டங்கள் செய்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசு துறையின் பெயரை பத்திரிக்கைக்கு வைத்துக்கொண்டு வருடா வருடம் மோசடி செய்துவரும் பத்திரிகை ஆசிரியர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்…. உஷார்…. மக்களே உஷார்….
ராசிபுரத்தில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்-September 4, 2023.
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: https://arasiyalsuriyan.com/wp-content/uploads/2023/09/RASIPURAM-MINISTER-KN.NEHRU-NEWS.mp4?_=3ராசிபுரத்தில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி 13 துறைகள் சார்ந்த 544 பயனாளிகளுக்கு 8 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றிடம் வகையில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மலச்சமுத்திரம், வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளநல்லூர், பட்டணம்,புதுப்பட்டி நாமகிரிப்பேட்டை, மற்றும் சீராப்பள்ளி என 8 பேரூராட்சிகளும், ராசிபுரம் நகராட்சி, மற்றும் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் என 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட 523 குக் கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சம் நபர்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வழங்கப்படும் மிகப்பெரிய திட்டமாகும். மேலும் காவிரி ஆற்றின் கரையில் குதிரை கால்மேடு கதவணைக்கும், நெருஞ்சிப்பேட்டை கதவணைக்கும் இடையில் நடுங்குளம் காட்டூர் எனும் இடத்தில் நீரோட்டம் நிலையத்துடன் கூடிய கிணற்றின் மூலம் எடுக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 1325.29 கிலோமீட்டர் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி வைத்துள்ள நிலையில் இந்த திட்ட பணிகள் நவம்பர் 2024 ஆம் ஆண்டில் முடிக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 8 பேரூராட்சிகள்,4 ஊராட்சி ஒன்றியங்கள்,1 நகராட்சி என ஏறத்தாழ 523 குக் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற 86 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்,97 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் ராசிபுரம் பகுதியில் இது போன்ற ஒரு பெரிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவின் இறுதியாக 13 துறைகள் சார்ந்த் 544 பயனாளிகளுக்கு 8 கோடியே 12 லட்சத்து 18 ஆயிரத்து 246 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதர செய்திகள்

Media error: Format(s) not supported or source(s) not found
Download File: https://arasiyalsuriyan.com/wp-content/uploads/2023/08/WhatsApp-Video-2023-08-06-at-12.43.06.mp4?_=4
JULY 2024 Month Magazine Ready for Download.. Click Here to know more..
பொது அறிவு தகவல்
- தக்காளி என்ற பெயர் எவ்வாறு வந்தது? மேலும் படிக்க…
- ராஜாவும் கபோதியும் மேலும் படிக்க…
- நெல் வரலாறு மற்றும் சில முக்கிய நெல் வகைகளைப் பற்றி காண்போம் மேலும் படிக்க…
- வாழ்க்கையின் தத்துவம் மேலும் படிக்க…