பொது அறிவு தகவல்

வாழ்க்கையின் தத்துவம்-August 25, 2023

நெல் வரலாறு மற்றும் சில முக்கிய நெல் வகைகளைப் பற்றி காண்போம் – August 11, 2023

arasiyal suriyan arasiyal suriyan

நெல்:

உலகில் பெரும்பாலான மக்கள் தினமும் சாப்பிடும் உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியாகும். மேலும் உலகிலேயே, சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.

நெல் வகைகள்:

நெற்பயிர் சுமார் ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடியதாகும். நெல்லின் மேலுறை உமி என அழைக்கப்படும். மேலுறை நீக்கப்பட்ட பின் அரிசி என்றழைக்கப்படும் இந்த நெல் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லின் வரலாறு:

நெல் ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். ஈரப்பாங்கான நிலங்களில் வளரக்கூடிய இது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. காட்டு நெல் இனமே நெல் இனங்களின் முன்னோடி என்கிறார்கள். பின்னர் உலகில் ஆசிய நெல், ஆப்பிரிக்க நெல் என இரு வகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் பயிரிடப்படுள்ளது. ஆசிய நெல் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

நெல் அல்லது அரிசி ரகங்கள்

மக்களை பொருத்தவரை நெல் இரகங்கள் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் நீளமான, மணமுடைய ‘பாஸ்மதி’ அரிசி, நீளமான, சன்னமான ‘பாட்னா’ அரிசி, குட்டையான ‘மசூரி’ அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக ‘பொன்னி’ அரிசி பிரபலமானது.

புழுங்கல் அரிசி:

தென் மற்றும் கிழக்கு இந்தியாவில் நெல் அறுவடைக்குப்பின் நீரில் வேகவைத்து, உலர்த்தி, பின்பு ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி ‘புழுங்கல்’ அரிசி என்று அழைக்கப்படுகிறது. இதற்க்கு கடினமான நெல் இரகங்களே தேர்வு செய்யபடுகின்றன. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை, இது எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது.

பச்சரிசி:

அறுவடைக்குப்பின் நெல்லை, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைக்கும் போது கிடைக்கும் அரிசி பச்சரிசி என்று அழைக்கபடுகிறது. செரிமான பிரச்சனை காரணமாக பலர் இவ்வகை அரிசியை சாப்பிடுவதில்லை.

மணமுடைய அரிசி:

மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே மணம் கொண்டவை. இந்திய இரகங்களான ‘பாஸ்மதி’, ‘பாட்னா’ ஆகிய இரகங்கள் உலக பிரசித்தி பெற்றவை.

பாரம்பரிய நெல் வகைகள்:

இந்தியாவில் முன்பு 2,00,000 கற்கும் அதிகமான நெல் வகைகள் முன்பு வழக்கத்தில் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.

தமிழக பாரம்பரிய நெல் வகைகள்:

சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை, வாடன் சம்பா, முடுவு முழுங்கி, களர் சம்பா, குள்ள்க்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சி, பூங்கார், கருத்தகார், சீதாபோகம், மணக்கத்தை போன்றவை ஒரு சில நம் பாரம்பரிய நெல் ரகங்களாகும்.

நெல் நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவாக மட்டுமல்ல மருத்துவ ரீதியான உணவாகவும் பயன்பட்டு வந்தது.

சில பாரம்பரிய நெல்லின் பயன்கள்:

பூங்கார்:

இந்த நெல் அரிசியை கர்ப்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சியாக செய்து கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சிவப்பு கவுணி:

இந்த நெல் அரிசி இதயத்தை பலப்படுத்தும், ஈறுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சமன்படுத்தும், மூட்டு வலியை குணமாக்கும்.

கருங்குறுவை:

இந்த நெல் வகை ரண குஷ்டத்தையும், உடலில் உள்ள சிற்சில விஷத்தையும் முறிக்கும். போக சக்தியை தரும், மேலும், இது ‘இந்தியன் வயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்தக்கார்:

இந்த நெல் வகை வெண்குஷ்டத்தை போக்கும். பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.

குடவாழை:

குடலை வாழ வைப்பதால் இதற்க்கு இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை சரி செய்யும்.

சீதாபோகம்:

இந்த அரிசி உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாக்கும். மேலும் அஜீரணத்தை குறைக்கும்.

மணக்கத்தை:

இது தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். மேலும் புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

காட்டுயானம்:

இந்த வகை நெல்லில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அபிரிதமாக இருப்பதால் இதய சம்பந்தமான வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். மேலும் டைப்-2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

அன்னமழகி:

இந்த அன்னமழகி நெல் இனிப்புச் சுவை கொண்டது. அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெடிப்பையும் போக்கும். உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

இலுப்பைப்பூ சம்பா:

இது பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை சரி செய்யும்.

கல்லுண்டைச் சம்பா:

இதை சாப்பிடுபவர்களுக்கு மல்யுத்த வீரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும்.

காடை சம்பா:

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

குன்றுமணி சம்பா:

இது வாதக் குறைபாடுகளை நீக்கும். விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

கிச்சிலி சம்பா:

இந்த நெல் ரகம் உடலுக்கு பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

குறுஞ் சம்பா:

இது பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயை நீக்கும்.

புழுகு சம்பா:

இந்த அரிசியை சாப்பிட்டால் உடலுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும்.

கைவரை சம்பா:

இது உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இந்த அரிசியை உண்டால் உடலில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.

மாப்பிள்ளைச் சம்பா:

இந்த நெல் நேரடி விதைப்பிற்கு ஏற்றது, சத்துள்ள இந்த நெல்லை சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

மணிச்சம்பா:

இந்த வகை நெல் அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிக சுகத்தை உண்டாக்கும்.

மிளகு சம்பா:

இது உடலுக்கு சுகத்தை தரும், பசியை உண்டாக்கும், வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

மைச்சம்பா:

இந்த நெல் வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம், வாந்தி போன்றவற்றை போக்கும்.

வாலான் நெல்:

இந்த நெல் மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், போஷக்கையும் உண்டாக்கும்.

மூங்கில் அரிசி:

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல். மூங்கிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடும்.

சண்டிகார்:

இந்த நெல் தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், உடலை முறுக்கேற்றும், நரம்புகளை பலப்படுத்தும், மற்றும் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டது.

கார் நெல்:

இந்த நெல் உணவை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நன்கு உறுதியடையும். உடல் தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும் பட்டுப் போலவும் இருக்கும்.

ராஜாவும் கபோதியும்-August 10, 2023

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா…  “மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்”ன்னு சொன்னார்.

மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும். ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.

அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு. ராஜாவும்  அப்படியே பண்ண…  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார். ராஜாவுக்கு சந்தோஷம்.

இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான். இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால. வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னுட்டார். ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரியத்தோட சரியாக  சொல்லுவான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.

அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு….  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான். ராஜாவுக்கு ஆச்சர்யம். எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.? குருடன் சொன்னான்.

ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன். ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார். இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.

யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார். ராஜா பார்த்தார். கூப்புடுங்கடா  அந்த கபோதிய. குருடன் வந்தான்.

ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு. குருடன் சொன்னான்.

ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான். ராஜாவுக்கு ஒரே குஷி.

சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.

டேய்.!! நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.

ராஜா திரும்ப கேட்டார்.குருடன் அமைதியா  சொன்னான். ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன். நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான். ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார். ராஜா… முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.

நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார். அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார். ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன். மூன்றாவது… ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.

நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன். ஆக….  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?

நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.

மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.

நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் பணமோ,சொத்தோ,

பதவியோ தீர்மானிப்பதில்லை..

*உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன…

தக்காளி என்ற பெயர் எவ்வாறு வந்தது? – August 7, 2023

arasiyal suriyan

‘தக்காளி’ – தான் நமக்கு புதியதே தவிர, தக்காளி என்ற பெயர் புதிதல்ல!

சீமைத்தக்காளி என்பது நம் நாட்டிற்கு வரும் முன்பே மணித்தக்காளி (மணத்தக்காளி), சொடக்குத் தக்காளி, மரத்தக்காளி போன்றவை ஏற்கனவே நம்மிடம் தொன்றுதொட்டு இருந்து வந்தவை!

இப்பெயர்களிலிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், தக்காளி என்ற பெயர் கிட்டத்தட்ட Berry (பெர்ரி) – என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு ஒப்பானது என்பதே!

“A berry is a small, pulpy, and often edible fruit. Typically, berries are juicy, rounded, brightly colored, sweet, sour or tart”.

பெர்ரி – என்பது பொதுவாக சிறிதான உருண்டைத் தோற்றத்தில் காணப்படும். சாற்றுடன் கூடிய சதைக்கனி வகைகளைக் குறிக்கும். சதைப்பற்று மிக்க இவை பெரும்பாலும் உண்ணக்கூடிய பழமாகவும், புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையில் சாறு நிறைந்து, பிரகாசமான நிறத்தில் காணப்படும்.

நாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் தக்காளிகளும் இத்தகைய பண்புகளைக் கொண்டதே!

தக்கிணி – என்ற சொல்லிலிருந்து தக்காளி என்ற பெயர் வந்திருக்கலாம்.
தக்கிணி – என்றால் மிகச் சிறியது, சிறிய அளவிலானது என்று பொருள். இன்றைக்கும் தக்கிணியோண்டு என்ற சொல் வழக்கில் உண்டு.

சீமைத்தக்காளிக்கு முன்பே நம்மிடம் இருந்த தக்காளிகள் தக்கிணி தோற்றம் கொண்டவையே!

மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது.
மணி என்றால் கருமை. மணிவண்ணன் என்றால் கருமை நிறக் கண்ணன்.

நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி சொடக்குத் தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலுக்கு உள்ளே இருக்கும்ங பசுமைநிறத் தக்காளி ‘பட்டாணி அளவு’ காணப்படும்.
இவையெல்லாம் நமது பண்டைக் காலம் தொட்டே மருத்துவ ரீதியாகவும், பயன்பாட்டு ரீதியாகவும் தக்காளி இருந்து வந்தது.

இன்றைக்கு நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட சிவப்புத் தக்காளி 16ம் நூற்றாண்டில்தான் இந்தியாவிற்குள நுழைந்ததாக வரலாறு சொல்கிறது. உருளைகிழங்கு, சர்க்கரைவள்ளி, மரவள்ளிகிழங்கு, மிளகாய், தக்காளி எல்லாமே தென் அமெரிக்காவிலிருந்து ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள் மூலமாக இங்கே வந்து சேர்ந்தவை.
ஆனால், இச்சீமைத்தக்காளி இங்கு வருவதற்கு முன்பே ‘தக்காளி’ – என்ற பெயர் தமிழ் மொழியில் வழங்கி வந்திருக்கிறது. இப்பொழுது நாம் பயன்படுத்தும் தக்காளியை தொடக்கத்தில் சீமைத் தக்காளி என்றுதான் மக்கள் அழைத்து வந்தனர்.