இன்று தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பள்ளி போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி – August 11, 2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் ஆணைப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எம் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு R. கலைச்செல்வன் MSc B.Ed அவர்கள் தலைமையில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு R. மகேந்திரன் M.A B.Ed அவர்களுடன் கலையாசிரியர் திரு அ.புஷ்பநாதன் M.A B.ed அவர்கள் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களும் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
ஈரோட்டில் தேமுதிக ஆர்ப்பாட்டம்- August 10, 2023
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த், கழகப் பொருளாளர் பிரேமலதா ஆகியோர்களின் ஆணைக்கிணங்க வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேரவை துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தொழில் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றியம் பகுதி நகரம் பேரூர் ஊராட்சி வட்ட வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது – August 9, 2023
கடந்த மாதம் இரண்டாம் தேதி பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்ததன் பேரில் தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா அவர்களின் தலைமையில் தருமபுரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் எட்டு கிலோ கொண்ட கஞ்சா பையுடன் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து காவல்துறை விசாரித்ததில் அவர்கள் இருவரில் ஒருவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செட்டிப் பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் மற்றொருவர் அதே பகுதியில் உள்ள அரசிராமணியை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் இவர்களை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களிடம் பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டரும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன் பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஏற்கனவே, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறை அதிகாரிகளிடம் குண்டர் சட்டத்தில் பதிவு செய்தது தொடர்பான ஆணை நேற்று ஒப்படைக்கப்பட்டது.
ராசிபுரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த கணவன் – August 8, 2023
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன் (39), இவரது மனைவி ராதா(33) திருமணம் ஆகி 1 மகன்,1 மகள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து தனது தந்தை ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சம்பாறை பகுதியில் கணவன் மனைவி இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினர் தங்கி வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கோவிந்தன் மது போதையில் இருந்ததாகவும், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கோவிந்தன், மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இருந்த ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்…
தெலுங்கு தேசம் மற்றும் YSR CONGRESS கட்சியினரிடையேயான மோதலால், வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன – August 5,2023
அண்மையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள புரபாலகோட்டாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல் துறை வாகனங்கள் உள்பட ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைக் கண்டித்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் ஆந்திர எல்லை சாலைகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியதால் வார இறுதி நாள்களில் திருப்பதி செல்ல இருந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே பேருந்துகள் வழ
என் மண் என் மக்கள் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் – August 5, 2023
என் மண் என் மக்கள் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் திரு. மங்களம்_ரவி அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு A.P. முருகானந்தம் Muruganandam A P அவர்களும், கோட்ட அமைப்பு செயலாளர் திரு பாலகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் மாநில செயலாளரும், மாவட்ட பார்வையாளருமான அக்கா திருமதி. மலர்கொடி அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் அக்கா திருமதி ஜோதீஸ்வரி கந்தசாமி அவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரு வடுகநாதன் அவர்கள், திரு வெள்ளகோயில் ஜெகன் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் திரு SR.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் திரு கருப்புசாமி அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்
வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி – August 4, 2023
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு சு.முத்துச்சாமி அவர்கள் தலைமையில், 123 பயனாளிகளுக்கு 11.06 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒகேனக்கல் பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார் – August 3, 2023
தருமபுரி மாவட்டம், பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது, உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதம், வெள்ள அபாய காலங்களிலும் தடுப்பது உள்ளிட்ட ஒத்திகை மேற்கொள்ள ஒகேனக்கல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றுப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழம் தெரியாமலும், சுழலில் சிக்கியும் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாவட்டங்களில் இருந்து இப்பகுதியில் வருவதற்குள் பாதிக்கப்படும் நபர் உயிரிழக்க நேரிடுகிறது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டும், மேலும் அந்தந்த மாவட்டங்களிலேயே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக இன்று பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்களுக்கு நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, ஆற்று நீரின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும், ஆற்றில் அதிகளவு நீர் வரும்போது சாதாரண படகுகளை இயக்கும் முறை மற்றும் விசைப்படகுகள் உள்ளிட்டவற்றை இயக்கி பேரிடர்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் வைத்தியலிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் தருமபுரி மாவட்ட காவல் துறையிலிருந்து பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
தருமபுரி 02-08-2023: தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் லால்வாணி உத்தரவின் பேரில் தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுஜாதா அவர்களின் மேற்பார்வையில் தர்மபுரி வட்டார உணவு பாதுகாப்பு துறை மேற்பார்வையாளர் குமணன் தலைமையில், இளநிலை உணவு பகுப்பாய்வாளர்கள் நந்தினி, ஜெயகாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தின் மூலம் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டீத்தூளில் செய்யும் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும், சமையல் எண்ணெய் மற்றும் மாவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் குறித்தும் எளிய முறையில் பொதுமக்களுக்கு செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 14 வது தவணையாக இன்று தகுதியான விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு ராஜஸ்தான் கிசான் நகரில் இன்று பிரதம மந்திரி மோடி அவர்கள் டெபாசிட் செய்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 30 ரூபாய் லஞ்சம் கேட்ட வனத்துறை ஊழியரை, தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ணாரி சோதனை சாவடியில் பணியாற்றும் வன ஊழியர்கள் 24 மணி நேரமும் வரும் சரக்கு வாகனங்களிடம் 10 ரூபாய் தொடங்கி 50 ரூபாய் வரை லஞ்சம் வாங்கி வருவது தொடர் கதையாக உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை ஒன்று இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது..?..?..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் இணைக்கும் முக்கிய பாதையாக விளங்குகிறது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் செல்வதும் வருவதும் வழக்கம்.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது. அதனை ஒட்டி வந்த ஓட்டுனரிடம், வனத்துறை ஊழியர் மூர்த்தி என்பவர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், ஓட்டுனர் தட்டி கேட்கவே, ஆத்திரமடைந்த வனத்துறை ஊழியர், அவரைத் தாக்கியுள்ளார். இதனை அறிந்த சக வாகன ஓட்டிகள் வனத்துறை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி தீபக்குமார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும், பொழுது திடீரென ஏற்கனவே தாக்கப்பட்ட வாகன ஓட்டி அழைத்து தாக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசூல் ஆகும் லஞ்ச பணத்தை சத்தியமங்கலத்தில் பணியாற்றும் அனைத்து வனத்துறையில் உள்ள அனைவருக்கும் பிரித்து தரப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியா நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திம்பம் மலைப்பாதை வழியாக தற்போது இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக வாகனங்களை அனுமதிக்க பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினர் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் வாகனம் அனுமதிக்கப்படுகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அதை உண்மைப்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரக அலுவலகத்தில் யானையின் தந்தங்கள் தீயிட்டு அளிக்கப்பட்டன. July 22, 2023
இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து வருகிறது
July 22, 2023
தேசிய குற்ற ஆவண பதிவின்படி இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து வரும் இந்த சூழ்நிலையிலும், இளம் சிறார்களின் கையில் மலிவாக கிடைக்கும் செல்போன்களின் மூலம் பல்வேறு ஆபாச வலைத்தளங்களில் வழியே விரவி வரும் பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய படங்கள் வீடியோக்கள் போன்றவை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய ஆப்களில் தடையின்றி கிடைப்பதும் இது போன்ற குற்றங்களுக்கு மூலகாரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, எந்த வடிவத்திலும் கிடைப்பதை விட இளம் சிறார்களுக்கு மொபைலின் மூலம் இந்த ஆபாச படங்கள் மிகவும் எளிதாக கிடைத்து விடுகின்றன. அதன் விளைவு தான் சமீபத்தில் தருமபுரியைச் சார்ந்த ஆறு வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமாக பேசப்படுகிறது. அரசுகள் இதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வையும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக திருச்செங்கோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி MLA பங்கேற்பு.
பல்லடத்தில் பயங்கரம் – 17 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் 3 பேர் கைது-August 10, 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பள்ளி சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனஎ. பின்னர் அந்த சிறுமியை புகைப்படம், வீடியோ எடுத்த மூன்று பேரும் வெளியே சொன்னால் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனிடையே காட்டுப்பகுதியில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தாயிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்தீபன்(26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டிருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை தங்கள் ஊரிலும் நடந்ததை எண்ணி பல்லடம் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். மேலும் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை கொட்டும் போராட்டம் – August 10, 2023
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டு கனரா பேங்க் எதிரில் உள்ள விநாயகர்_கோவில் சுவற்றின் முன்பு குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலை.. இந்த குப்பை தேக்கத்தின் மூலமாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தீரா’நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இது போன்று பல இடங்களில் குப்பை கொட்டி கிடப்பதாகவும் இதை கண்டுகொள்ளுமா தாராபுரம் நகராட்சி நிர்வாகம்? என கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் இச்செயலை சரி செய்யாவிட்டால் பா.ஜ.க தாராபுரம்_நகர_இளைஞர்_அணி சார்பாக பொதுமக்களுடன் தாராபுரம் நகராட்சியை கண்டித்து குப்பை_கொட்டும்_போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்
ராசிபுரம் அருகே வாழைத்தார்களை திருடிய பட்டதாரி இளைஞர் கைது. வாழைத்தார்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த போலீசார் – August 8, 2023
6.8.2023, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்.
கிருத்திகா என்பவர் கோபியில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் வழியில் தனது கைப்பை மற்றும் கைப்பேசியை தவறவிட்டார். நம்பியூரைச் சார்ந்த கிருத்திகா அவர்கள் தனது கைப்பேசி மற்றும் கைப்பையை தவறவிட்டவுடன் “I DETECTIVE “துப்பறியும் நிறுவனம் உதவிமூலம் ஆன்லைன் புகாரினை செய்து,கோபிகாவல் நிலையத்திற்கு உரிய தகவலை தெரிவித்த உடன் ஒரு மணி நேரத்தில் கோபி காவல் ஆய்வாளர் திரு. சண்முகவேல் அவர்களின் பரிந்துரைப்படி,எஸ்.எஸ்.ஐ திரு.வின்சென்ட் சகாயம்,எஸ். ஐ.திரு.கபிலக்கண்ணன், கிரைம் டிபார்ட்மெண்ட் HC திரு.சத்தியமூர்த்தி ஆகியோர் துரிதமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.இதை தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் காணமல் போன பொருட்களை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிருத்திகாவிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து கோபி மக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த அனைத்து காவலர்களுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஆசனூர், சாலையோர வனப்பகுதிகளில் காட்டு யானைகள் . வாகன ஓட்டிகள் கவனம் August 5, 2023
தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் டீ வடை போண்டா பஜ்ஜி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை பசிக்காக வாங்கி உண்கிறார்கள், அப்படி சாப்பிடும் உணவு பண்டங்களின் ஒன்றான வெள்ளரிக்காய் விற்கும் இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது அத்தனை ஈக்கள் அந்த வெள்ளரிக்காயில் அமருகிறது இதை அப்படியே பயணிகளிடம் விற்பனை செய்து வருகிறார்கள். இதை அப்படியே மக்கள் வாங்கி உண்பதால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி மனிதனுக்கு இன்னும் ஒரு சில உபாதைகள் வர வாய்ப்பில் அதிகமாக உள்ளது எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதாரமான முறையில் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யுமாறு பயணிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் – August 4, 2023
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் திருப்பூர் தாராபுரம், தாராபுரத்தில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றமடைந்தனர். ஆடிப்பெருக்கு தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஒருவாரம் பெய்து வந்தது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் இருகரை தொட்டு ஓடியது. அதனால் பொதுமக்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் அமராவதி ஆற்றில் புனித நீராடி ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆடிப் பெருக்கை கழித்து மகிழ்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த ஒரு மாத காலமாக தென்மேற்கு பருவ காற்று வீசி வருவதும் மாலையில் மேகம் மூட்டம் கூடி மழை பெய்வது போல தோற்றம் ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மழை பொய்த்ததால் அணையிலிருந்து தண்ணீரும் பொதுப்பணித்துறையினர் திறக்கவில்லை. விவசாயம் பொய்த்து போனதால் தங்கள் விளை நிலங்கள் தரிசு நிலமாக மாறியது. புதுமணத்தம்பதி ஏமாற்றம் கால் நடைகளுக்கே தீவனம் இன்றி விவசாயிகள் தவித்து வரும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் பொய்த்தது.
அமராவதி அணையில் நீர்மட்டம் சரிந்து போனது. கடந்த சில தினங்களால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்தனர். பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் வேளாண் பயிர்கள் விதைப்பதற்கு தென்மேற்கு பருவமழை பெரும் சவாலாக உள்ளது. எனவே இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு வறண்ட ஆடிப்பெருக்காக காணப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-வது நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் உடன் சேலம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஊராட்சி மன்ற தலைவர்கள் & உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர்கள்,உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரியில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை. மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை சமீபத்தில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திரதின அமுதப் பெருவிழாவை இந்தியர்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார். இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகங்களின் மூலமாக அனைவருக்கும் தேசியக் கொடி எளிதாக கிடைக்கும் பொருட்டு அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விற்பனைக்கு உள்ளது. கொடியின் விலை ரூபாய் 25 மட்டுமே. ஜிஎஸ்டி கிடையாது. தேசிய கொடியை ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மூலம் வீட்டுக்கே வந்து தேசியக் கொடியை கொடுப்பதற்கு அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து திருப்பூர் நோக்கி ஒரு பஞ்சு மூட்டையை ஏற்றி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றபோது பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிப்பேட்டை என்ற இடத்தில் வேகத்தடையில் ஏறி இறங்கிய பொழுது குறுக்கே சென்ற மின் வயர்கள் மீது உரசியதால் பஞ்சு மூட்டைகள் திடீரென தீ பிடித்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் முருகன் என்பவர் உடனே வண்டியை நிறுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் கொடுத்ததன் விளைவாக விரைந்து வந்த அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் பவானியில் ஜவுளி தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், தமிழ்நாடு கைத்தறிதுறை அமைச்சர் R.காந்தி அவர்களும் திறந்து வைத்து மக்களுக்கு முகாமினை துவங்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து டெக்ஸ்வேலியில் நடைபெற்று வரும் மாநில கைத்தறி கண்காட்சிகளை துவங்கி வைத்து ஜவுளி தொழில் உற்பத்தியாளர்களுடன் உரையாடினர்.இந்நிகழ்வில் ஈரோடுமாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்க்ரா, கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.