திரு கே. மணிகண்டன்
நமது கைகளில் தற்போது தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த “அரசியல் சூரியன் மாத இதழ்” மற்றும் “அரசியல் சூரியன் டிவி” என்ற இரட்டைக் குழல் அரசியல் துப்பாக்கி நமது ஆசிரியர் / வெளியீட்டாளர். திரு கே. மணிகண்டன் அவர்களால் உருவாக்கப்பட்டது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாதாரண பத்திரிக்கை நிருபராக தனது ஊடக வாழ்வை துவக்கிய நமது ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் படிப்படியாக தனது உழைப்பு எனும் வேர்வைத் துளிகளால் மெல்ல வளர்ந்து, சீரான வளர்ச்சியை தன்னகத்தே கொண்டு, பல்வேறு இன்னல்கள், மிரட்டல்கள், சோதனைகள், சவால்களையெல்லாம் எதிர்கொண்டு, சோதனைகளை உரமாக்கி இன்று அரசியல் சூரியன் என்ற ஒரு விருட்சமாய் நம்மிடையே உயர்ந்து நிற்கிறார்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத அறநெறியை குறிப்பாலுணர்த்தும் வகையில் “அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!” என்ற விருப்பச்சொல்லை மனதில் இருத்தி, கடந்த 2021 இல் தமிழ் மண்ணில் பிரசவித்த இந்த அரசியல் சூரியன் மாத இதழ் என்னும் குழந்தை தனது முதல் அகவையிலே ISO 9001:2015 CERTIFIED MAGAZINEஆக, சிறந்த பத்திரிக்கை என்ற பெயரோடும், தற்போது அரசியல் சூரியன் டிவி என்ற கிளையோடும் வளர ஆரம்பித்துள்ளது.
ஆசிரியர் மணிகண்டன் அவர்களின் விடாமுயற்சியிலும், அவரின் மேன்மையான எண்ணத்தினாலும், நமது செய்தியாளர்களின் உழைப்பு, ஆதரவினாலும், உதித்த இந்த அரசியல் சூரியன் குழுமம் தெளிவான பார்வையோடும், சிந்தனையில் ஒருமித்தும், பத்திரிக்கை இலக்கணத்துக்கே உரிய நடுநிலையோடும், வீரநடை போடுகின்ற எங்களை சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துங்கள், வளர்கின்றோம்.
நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டி காட்டுங்கள்!
யாருக்கும் அஞ்சாமல் செய்தி வெளியிடுவோம்!
நமது அரசியல் சூரியன் செய்தி குழுமத்தின் வளர்ச்சிக்கு வாசகர்களின் கருத்துக்களையும், செய்திகளையும் எதிர்பார்க்கின்றோம்….