August News
ராசிபுரம் அருகே வேளாண்மை அலுவலகத்தை திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்ததாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் – August 29, 2023
ராசிபுரம் அருகே வேளாண்மை அலுவலகத்தை திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்ததாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.மனு அளிக்க சென்ற போது அரசு அதிகாரிகளுக்கு மரியாதை கொடும்மா நாங்கள் அரசு தேர்வு எழுதி தான் வேலைக்கு வந்ததாக வருத்தத்துடன் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், வேளாண் அலுவலகமும் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அலுவலமானது ஒடுவன்குறிச்சி சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கு மாற்றப்பட்டது.இதை அடுத்து பழைய ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை துறையினர் அலுவலகம் அமைத்து உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்து நிலையில், திமுகவினர் பொறுப்பேற்றவுடன் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் நாமகிரிப்பேட்டையில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க மத்திய அரசு 2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது வேளாண் அலுவலகத்தில் புதிய கட்டிடத்தை கட்டாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இடம் தேர்வு செய்து வருவதாகவும் அதனை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் வேளாண்மை அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நாமகிரிப்பேட்டை வட்டாட்சியர் அலுவலர் பாலமுருகனை சந்தித்து பொதுமக்கள் மனு அளிக்க சென்றனர். அப்போது சென்ற விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.அதில் பாலமுருகன் அரசு அதிகாரிகளுக்கு மரியாதை கொடும்மா நாங்கள் அரசு தேர்வு எழுதி தான் இந்த வேலைக்கு வந்துள்ளதாகவும் வருத்தத்துடன் பேசினார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் திடீரென்று விவசாயிகளிடம் பேசுகையில் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு என்னால் சம்பளம் வாங்கித் தர முடியாத நிலையில் உள்ளதாக புலம்பிய நிலையில் அதற்கு மாறாக விவசாயிகள் தாங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என பதிலுக்கு விவசாயிகள் புலம்பியதால் சிறிது நேரம் பரபரப்பாக சூழல் காணப்பட்டது. பாரதிய ஜ,னதா கட்சியினர் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தங்களது கோரிக்கை மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனிடம் வழங்கினார்…
ராசிபுரம் அருகே பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் கொசுப்பேட் பயன்படுத்தியா போது எதிர்பாராத விதமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து தீ விபத்து – August 29, 2023
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியில் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கண்ணன்(42) இவரது மனைவி சுபித்திரா(40), தம்பதியினருக்கு ஹர்ஷவர்ஷினி(18), ஹன்சிகா(10) என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பட்டாசு தொழில் நடத்தி நிலையில் கண்ணன் தனது குலதெய்வ கோவில்க்கு செல்வதற்காக குடோனையிலிருந்து சிறிதளவு பட்டாசு எடுத்துக்கொண்டு தனது வீட்டில் வைத்துள்ளார். கண்ணன் மாடியில் அமர்ந்து கொசுப்பேட்டை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அதிலிருந்து எதிர்பாராத விதமாக நெருப்பு வெளிவந்ததாகவும், பட்டாசு வெடித்து தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிப்பதை கண்ட கண்ணன் மாடியில் இருந்து தனது வீட்டிற்குள் சென்றுள்ளார். வீட்டில் மாடியில் இருந்து பட்டாசு வெடிப்பதை கண்ட பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டின் 3வது மாடியில் சிக்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை கயிறு கட்டி கீழே இறக்கி தீயை அணைத்தனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய கண்ணனை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா சம்பவ இடத்திற்கு சென்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 30% காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அனுமதி இன்றி பட்டாசு வீட்டில் வைத்திருந்த கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ராசிபுரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் 8 வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள் திருட்டு. காவல் நிலையம் அருகே திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு – August 28, 2023
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலுர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள 8 வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளின் பூட்டை உடைத்து ஒயர்கள், மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரிகல் பொருட்கள் சேதம் அடைந்ததை குறித்து கல்லூரி முதல்வர் பானுமதியுடன் தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் பானுமதி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் அருகாமையிலே ராசிபுரம் காவல் நிலைய உதவி மையமானது செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகாமையிலேயே காவல் நிலையம் உள்ள போது மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர் வசிட்டர் நதியை நஞ்சாக்கும் சேக்கோ ஆலைக்கு அனுமதி தராதே! விவசாயிகள் உண்ணாவிரதம்! – August 28, 2023
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காட்டுக்கோட்டை ஊராட்சி பகுதியில் மிக பெரிய ஜவ்வரிசி ஆலை அமைப்பதற்கு அனுமதி தராதே என்று இன்று 28.8.2023 சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க.சங்கரய்யா தலைமை தாங்கினார்.
“புதியதாக அமைக்கப்பட இருக்கும் ஜவ்வரிசி ஆலை அருகில் ஓடும் விசிட்டர் நதியை நஞ்சாக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் 1500க்கும் மேலான விவசாய நிலம் பாதிக்கப்படும்” என்பதே போராடும் விவசாயிகளின் குரலாக இருக்கிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டபோது, சேலம் மாநகர காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதன்பின் சென்னை உயர்நீதி மன்றம் சென்று அனுமதி பெற்று இன்று உண்ணாவிரதம் நடத்த வேண்டிய நிலையை என்னவென்பது? ஆம், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத ஒரு துர்பாக்கிய நிலை தொடர்வதுதான் சோகத்திலும் சோகம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
ஆலாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் ஊழலை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் – August 28, 2023
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்ய இருந்த நிலையில் கூட்டம் ரத்து. பேரூராட்சி நிர்வாகத்தின் ஊழலை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது, இதற்காக திமுக உறுப்பினர்கள் எட்டு பேரும், அதிமுக உறுப்பினர்கள் ஐந்து நபர்களும் கூட்ட அரங்கிற்கு வந்தனர். அப்பொழுது பேரூராட்சியின் தலைவர் இன்று கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தது அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் இல்லாதபோது, அதிகாரிகளாக பல செயல்படுவதாகவும், தூய்மை பணிக்கு மகளிர் குழு கிளை சார்பாக பணியில் ஈடுபடுத்துவதாக கூறி மற்றவர்களை பயன்படுத்தி பணம் கையாடல் செய்வதாகவும், மத்திய அரசின் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் குடிநீர் கட்டணம் வசூலித்து முறைகேடாக ரசீதுகள் வழங்கப்படுவதாக கூறி கோசங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்கள் புகார் கடிதத்தை கொடுக்க சென்ற பொழுது அதிகாரிகள் இல்லாததால் திரும்பினர்.
சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை. ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம்.
ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன். நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.
உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார். நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார். நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன். அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார்.
நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன். இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன். வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன். அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன்.
உதவி செய்தது. யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது. அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் திருவாரூர் வருகை புரிந்த போது அரசியல் சூரியன் மாத இதழ் வழங்கியபோது திருவாரூர் நிருபர் ஆர். வீரமணி – August 26, 2023
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் 384 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்-August 26, 2023
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கடந்த இரண்டு மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்த, கொண்டு செல்வோர் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் என 99 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து 384 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஐயாயிரம் விதம் மொத்தம் 525000 தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விற்பனை செய்து வரும் நபர்கள் கண்டறியப்பட்டு 54 நபர்களது கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் புகையிலை சாந்த பொருள்கள் விற்போர் தொடர்பான புகாருக்கு வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாடு புளியோதரை மாநாடு: செய்தியாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை ஈ.வி.கே.எஸ் பேட்டி- August 24, 2023
ஆளுநரின் செயல்கள் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். அவரது செயல் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது. TNPSC தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார், ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது.
பத்திரிக்கையாளர்கள் பஸ் பாஸ் கிடைப்பது சம்பந்தமான கேள்விக்கு உண்மையாக உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு செய்தித் துறையில் இருந்து வரக்கூடிய சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் அனைத்துமே காசு இருந்தால் மட்டுமே கிடைக்கிறது என்று அவரிடம் புகார் தெரிவித்தனர் இது பற்றி விண்ணப்பம் கொடுங்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக தான் பார்க்கிறேன் என விமர்சித்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதேபோல் இறந்தவர்களின் பெயரை பயன்படுத்தி காப்பீடு என்ற பெயரில் பணத்தை எடுத்து இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவார் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். ஆளுநரை மக்கள் விரைவில் ஊரை விட்டு அனுப்பும் சூழல் வரும். சட்டசபையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ அதில் கையெழுத்து மட்டும் போட வேண்டியது தான் ஆளுநரின் வேலை. அண்ணாமலையை பொறுத்தவரையில் வாயை திறந்தாலே பொய் தான் சொல்கிறார். அவர் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் செல்கிறார். இந்த பாதயாத்திரை முடிந்த பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம். மழை பொழிவு குறைவாக உள்ளதால், தற்போது 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்த போது, மாநிலங்கள் வேண்டும் என்றால் அமல்படுத்தி கொள்ளலாம் இல்லை என்றால் நிறுத்தி விடலாம் என்று கூறியது. ஆனால் பாஜக அரசு நீட் தேர்வை கட்டாயமாக அமல்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்க வேண்டும்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.
70, 80, 90களில் பிறந்தவர்களின் பள்ளி பருவத்தை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டார்.. அருமை.. அருமை-August 22,2023
August 21, 2023
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்கனவே சந்திரயான் 2-ஐ கடந்த 2019-ல் செலுத்தியிருந்தது. அப்போது லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதியதால் தகவல் தொடர்பு கிடைக்காமல், திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா செலுத்தியுள்ளது. லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது. இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.
வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு சந்திரயான் 3 நிலவில் மெல்ல தரையிறங்கும்- August 21, 2023
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113×157 கி.மீ என்கிற அளவிலிருந்து, இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது.
சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பின்னர் அதன் தூரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே பாக்கி இருக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பெண்கள் போல் வேடமிட்டு மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தும் கும்பல் – August 19, 2023
பெண்கள் போல் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள் சாப்பிட்டவர் மயக்கமுற்றவுடன் அவர்கள் தங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்சை வரவழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடிப்பார்கள் இதுதான் அவர்களின் திட்டம். ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் உள்ளன. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர் – August 19, 2023
ஆத்தூர் அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாணவர்கள் கொரோனா கால முடக்கத்தில் இருந்து முழுதாய் வெளிவந்து ஆர்வத்துடன் பல போட்டிகளில் கலந்து கொண்டதைக் காண முடிந்தது .இன்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கான போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இதில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் கலந்து கொண்டனர்.அவர்கள் ஆர்வத்துடன் விளையாடி , தங்கள் குழந்தைகளின் அணிக்கு மதிப்பெண்களைக் கூட்டும் வகையில் வெற்றி வாகை சூடினர். இதனைக் கண்டு அனைத்து மாணவர்களும் உற்சாகமடைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட பெற்றோர்களும் தங்கள் பள்ளிப் பருவத்தையே மறுபடியும் தொட்டுவிட்ட மகிழ்வு பெற்றனர். போட்டிகளில் கலந்து கொண்ட பெற்றோர்களைப் பள்ளியின் தலைவர் திரு பாலகுமார், பொருளாளர் செல்வம் ,செயலாளர் வரதராஜன், பள்ளியின் நிறுவனர்கள் முகமது ஈசாக் ,கண்ணன், பள்ளியின் முதல்வர் திருமதி G.சுகந்திமற்றும் அனைத்து இயக்குநர்கள் ஆகியோர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வனப்பகுதியில் சாலையேரங்களில், யானைகள் நடமாட்டம் . வாகன ஓட்டிடிகள் கவனமாக செல்லவும்.
August 17, 2023
ஐயா வணக்கம் தெற்கு காவல் நிலையம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு சுமார் 46 வயது மதிக்க செல்வம் என்ற நபர் உடல் நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நள்ளிரவு இரண்டு முப்பது மணிக்கு இறந்து விட்டதாக தகவல் முகவரி ஏதுமில்லை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் பணிகளை ஆய்வு செய்தார் – August 17, 2023
(17/08/2023) இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் பணிகளை ஆய்வு செய்தார்…..
அதன்பின் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு,உள் நோயாளிகள் பிரிவு,பிரசவ வார்டு பிரிவு மற்றும் கூடுதலாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவமனையே ஆய்வு செய்தார்.. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு N.கயல்விழி செல்வராஜ் அவர்கள், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் அவர்கள், நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள், நகர கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம் BE., அவர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் அவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக,நகர கழக , கிளை கழக நிர்வாகிகள்,மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் கோவில் அறங்காவலர்கள்,கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்லாநத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் ஆடி மாதம் திருவிழா – August 16, 2023
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்லாநத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் ஆடி மாதம் அம்மனுக்கு பால்குடம் எடுத்து கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்கள் மதுரையில் நடக்கும் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
77 ஆவது சுதந்திர தின விழா-August 16, 2023
77 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம். சரயு அவர்கள் நாடு முழுவதும் நேற்று (15-08-2023) சுதந்திர தினத்தின் 7 7வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே எம் சரயு அவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி புறா மற்றும் வண்ண பலன்களை பறக்கவிட்ட அவர் காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சித் தலைவர் ஊரக வளர்ச்சித் துறையில் சிறப்பாக பணியாற்றிய திரு. விமல்ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும், கொடி நாளுக்காக அதிக நிதி வசூல் செய்த ஓசூர் புறநகர் வளர்ச்சிக் குழு அலுவலர் திரு. சண்முகம் அவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுதந்திர தினவிழா சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் ஊராட்சி ஒன்றியம் மஜீத்கொல்லஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை- August 12, 2023
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி EB காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஹரிராம் (15). இவனுடைய தாயார் டியூஷன் செல்லாததை கண்டித்ததனால் கோபித்துக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மாரண்ட அள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் SPB உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு-August 12, 2023
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இன்று சென்னையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் SPB உயர்நிலைப் பள்ளியில் காவல் ஆய்வாளர் திரு. பி.சுகுமார் அவர்கள் மாணவர்களுக்கு போதை பொருள் தடுக்கும் விதமாக பேசினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், 200க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள், போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 21 வது வார்டில் புதிய மழை நீர் வடிகால்-August 12, 2023
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 21 வது வார்டில் புதிய மழை நீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை 34.50 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்கள்…. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு N கயல்விழி செல்வராஜ்.MCom,BEd, அவர்கள், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு .பாப்புகண்ணன்.ME (str),LLB , அவர்கள், நகர கழக செயலாளர் பொறியாளர் சு . முருகானந்தம்.BE, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், நகர மன்ற துணைத் தலைவர் ஹோட்டல் ரவிச்சந்திரன் , உடன் மாவட்ட கழக, நகர கழக, கிளைக் கழக, நகர மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இன்று ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத தாராபுரம் நகர பகுதி – August 12 , 2023
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக தாராபுரம் பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டது, கடந்த நான்கு ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது, இன்று சுமார் மாலை 4 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கி அடுத்த அரை மணி நேரத்திற்கு மேலாக கனமான மழை பெய்தது, இதன் காரணமாக தாராபுரம் அமராவதி ரவுண்டானாவில் சரியா முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீர் அதிக அளவில் தேங்கி, அங்கு இருக்கும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகன போக்குவரத்திற்கு கடும் அவதியாகவும் இருந்தது, உடனடியாக அந்த பகுதிக்கு மழை நீர் வடிகால் வாரியம் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தாளவாடி அருகே காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்திய கரும்பு விவசாயிகள் – August 11, 2023
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கரும்புகளை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு ஏற்றி சென்ற லாரிகளை தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.
தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை மூலம் ஒப்பந்த முறையில் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். இங்கிருந்து அறுவடை செய்யப்படும் கரும்பானது சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் கரும்புகளை வெட்டுவதற்கு கூலியானது அதிகமாக கேட்பதாகவும் அந்த கூலிக்கு கரும்புகளை வெட்டினால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கரும்பு வெட்டுக்கூலியை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என பலமுறை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினிடம் தாளவாடி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுக்களை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்கூடாது எனக் கூறி தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிகள் தாளவாடி கரும்பு விவசாய சங்கத்தினர் அதிக கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் தாளவாடி வட்டாரத்தில் கரும்பு வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் கரும்பு விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் நியாயமான வெட்டுக்கூலி விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து முடிவை தெரிந்த பிறகுதான் இந்த முற்றுகை கைவிடப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிணந்திண்ணி? புரோக்கர்களின் பிடியில்!திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதிகாரிகள்?? – August 11, 2023
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் வேளையில். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ரெய்டு நடத்தி பலமுறைகேடான ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள், ஆவணங்களை ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதை அறியாத சில புரோக்கர்கள், திருப்பூர் வடக்கு வட்டார அலுவலக அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு எங்களுக்கு மேலிட செல்வாக்கு அதிகம் உள்ளது, எங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற தொனியிலும், இறுமாப்புடனும், உயர் அலுவலர்களின் ஆதரவுடனும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கண்டிப்புடனும் கடும் வசூல் வேட்டை நடத்தி பொதுமக்களின் ரத்தத்தை மனிதாபிமானமில்லாமல் உறிஞ்சியும் வருகின்றனர். இதற்கு திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரும் உடந்தையா? கண்டுகொள்ளாத சம்பந்தப்பட்ட மேலிட உயர் அதிகாரிகள்! நடவடிக்கை பாயுமா?
தக்க ஆதாரங்களுடன்….
www.arasiyalsuriyan.com
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பள்ளி போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி – August 11, 2023.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் ஆணைப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எம் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு R. கலைச்செல்வன் MSc B.Ed அவர்கள் தலைமையில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு R. மகேந்திரன் M.A B.Ed அவர்களுடன் கலையாசிரியர் திரு அ.புஷ்பநாதன் M.A B.ed அவர்கள் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களும் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பல்லடத்தில் பயங்கரம் – 17 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் 3 பேர் கைது-August 10, 2023.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பள்ளி சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனஎ. பின்னர் அந்த சிறுமியை புகைப்படம், வீடியோ எடுத்த மூன்று பேரும் வெளியே சொன்னால் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனிடையே காட்டுப்பகுதியில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தாயிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்தீபன்(26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டிருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை தங்கள் ஊரிலும் நடந்ததை எண்ணி பல்லடம் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். மேலும் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் தேமுதிக ஆர்ப்பாட்டம்- August 10, 2023.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த், கழகப் பொருளாளர் பிரேமலதா ஆகியோர்களின் ஆணைக்கிணங்க வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேரவை துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தொழில் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றியம் பகுதி நகரம் பேரூர் ஊராட்சி வட்ட வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குப்பை கொட்டும் போராட்டம் – August 10,2023.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டு கனரா பேங்க் எதிரில் உள்ள விநாயகர்_கோவில் சுவற்றின் முன்பு குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலை.. இந்த குப்பை தேக்கத்தின் மூலமாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தீரா’நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இது போன்று பல இடங்களில் குப்பை கொட்டி கிடப்பதாகவும் இதை கண்டுகொள்ளுமா தாராபுரம் நகராட்சி நிர்வாகம்? என கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் இச்செயலை சரி செய்யாவிட்டால் பா.ஜ.க தாராபுரம்_நகர_இளைஞர்_அணி சார்பாக பொதுமக்களுடன் தாராபுரம் நகராட்சியை கண்டித்து குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
தர்மபுரியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது – August 9, 2023.
கடந்த மாதம் இரண்டாம் தேதி பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்ததன் பேரில் தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா அவர்களின் தலைமையில் தருமபுரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் எட்டு கிலோ கொண்ட கஞ்சா பையுடன் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து காவல்துறை விசாரித்ததில் அவர்கள் இருவரில் ஒருவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செட்டிப் பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் மற்றொருவர் அதே பகுதியில் உள்ள அரசிராமணியை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் இவர்களை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களிடம் பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டரும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன் பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஏற்கனவே, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறை அதிகாரிகளிடம் குண்டர் சட்டத்தில் பதிவு செய்தது தொடர்பான ஆணை நேற்று ஒப்படைக்கப்பட்டது.
ராசிபுரம் அருகே வாழைத்தார்களை திருடிய பட்டதாரி இளைஞர் கைது. வாழைத்தார்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த போலீசார் – August 8, 2023.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கருங்குட்டைகாடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் அஜித் குமார்(29),B.A ENGLISH முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அஜித் குமாருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் 5 குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில் அஜித்குமார் ஆயில்பட்டி, கார்கூடல்பட்டி, மங்களபுரம்,உரம்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களிலிருந்து வாழைத்தார்கள் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயில்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் வாழைத்தார்கள் திருடிய போது அவ்வழியாகச் சென்ற உரிமையாளர் அஜித்குமாரை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பி ஓடிய அஜித்குமாரை நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் உதவியுடன் துரத்தி சென்று அஜித்குமாரை ஆயில்பட்டி காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.பின்னர் ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப வருமானத்திற்காக அவ்வப்போது வாழைத்தார்களை திருடி விற்பனை செய்து வந்ததாகவும், 40க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் வாழைத்தார்களை திருடி விற்பனை செய்தது விசாரணை தெரிவிவந்தது. பின்னர் அஜித்குமாரை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வாழைத்தார்களுடன் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.பின்னர் நடுவர் ஹரிகரன் விசாரணை மேற்கொண்டு 6 நாட்கள் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவு விட்டதின் பெயரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராசிபுரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த கணவன் – August 8, 2023.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன் (39), இவரது மனைவி ராதா(33) திருமணம் ஆகி 1 மகன்,1 மகள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து தனது தந்தை ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சம்பாறை பகுதியில் கணவன் மனைவி இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினர் தங்கி வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கோவிந்தன் மது போதையில் இருந்ததாகவும், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கோவிந்தன், மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இருந்த ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்.-August 6,2023.
கிருத்திகா என்பவர் கோபியில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் வழியில் தனது கைப்பை மற்றும் கைப்பேசியை தவறவிட்டார். நம்பியூரைச் சார்ந்த கிருத்திகா அவர்கள் தனது கைப்பேசி மற்றும் கைப்பையை தவறவிட்டவுடன் “I DETECTIVE “துப்பறியும் நிறுவனம் உதவிமூலம் ஆன்லைன் புகாரினை செய்து,கோபிகாவல் நிலையத்திற்கு உரிய தகவலை தெரிவித்த உடன் ஒரு மணி நேரத்தில் கோபி காவல் ஆய்வாளர் திரு. சண்முகவேல் அவர்களின் பரிந்துரைப்படி,எஸ்.எஸ்.ஐ திரு.வின்சென்ட் சகாயம்,எஸ். ஐ.திரு.கபிலக்கண்ணன், கிரைம் டிபார்ட்மெண்ட் HC திரு.சத்தியமூர்த்தி ஆகியோர் துரிதமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.இதை தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் காணமல் போன பொருட்களை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிருத்திகாவிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து கோபி மக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த அனைத்து காவலர்களுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டை தெரிவித்தனர்.
தெலுங்கு தேசம் மற்றும் YSR CONGRESS கட்சியினரிடையேயான மோதலால், வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் – August 5,2023.
அண்மையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள புரபாலகோட்டாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல் துறை வாகனங்கள் உள்பட ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைக் கண்டித்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் ஆந்திர எல்லை சாலைகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியதால் வார இறுதி நாள்களில் திருப்பதி செல்ல இருந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே பேருந்துகள் வழ.
என் மண் என் மக்கள் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் – August 5, 2023.
என் மண் என் மக்கள் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் திரு. மங்களம்_ரவி அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு A.P. முருகானந்தம் Muruganandam A P அவர்களும், கோட்ட அமைப்பு செயலாளர் திரு பாலகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் மாநில செயலாளரும், மாவட்ட பார்வையாளருமான அக்கா திருமதி. மலர்கொடி அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் அக்கா திருமதி ஜோதீஸ்வரி கந்தசாமி அவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரு வடுகநாதன் அவர்கள், திரு வெள்ளகோயில் ஜெகன் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் திரு SR.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் திரு கருப்புசாமி அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஆசனூர், சாலையோர வனப்பகுதிகளில் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனம்-August 5, 2023.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்போது மக்களுக்கு இலவசமாக நோய் பரப்பும் திட்டம் – August 5,2023
தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் டீ வடை போண்டா பஜ்ஜி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை பசிக்காக வாங்கி உண்கிறார்கள், அப்படி சாப்பிடும் உணவு பண்டங்களின் ஒன்றான வெள்ளரிக்காய் விற்கும் இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது அத்தனை ஈக்கள் அந்த வெள்ளரிக்காயில் அமருகிறது இதை அப்படியே பயணிகளிடம் விற்பனை செய்து வருகிறார்கள். இதை அப்படியே மக்கள் வாங்கி உண்பதால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி மனிதனுக்கு இன்னும் ஒரு சில உபாதைகள் வர வாய்ப்பில் அதிகமாக உள்ளது எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதாரமான முறையில் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யுமாறு பயணிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி – August 4, 2023.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு சு.முத்துச்சாமி அவர்கள் தலைமையில், 123 பயனாளிகளுக்கு 11.06 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் – August 4, 2023.
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் திருப்பூர் தாராபுரம், தாராபுரத்தில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றமடைந்தனர். ஆடிப்பெருக்கு தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஒருவாரம் பெய்து வந்தது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் இருகரை தொட்டு ஓடியது. அதனால் பொதுமக்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் அமராவதி ஆற்றில் புனித நீராடி ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆடிப் பெருக்கை கழித்து மகிழ்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த ஒரு மாத காலமாக தென்மேற்கு பருவ காற்று வீசி வருவதும் மாலையில் மேகம் மூட்டம் கூடி மழை பெய்வது போல தோற்றம் ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மழை பொய்த்ததால் அணையிலிருந்து தண்ணீரும் பொதுப்பணித்துறையினர் திறக்கவில்லை. விவசாயம் பொய்த்து போனதால் தங்கள் விளை நிலங்கள் தரிசு நிலமாக மாறியது. புதுமணத்தம்பதி ஏமாற்றம் கால் நடைகளுக்கே தீவனம் இன்றி விவசாயிகள் தவித்து வரும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் பொய்த்தது.
அமராவதி அணையில் நீர்மட்டம் சரிந்து போனது. கடந்த சில தினங்களால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்தனர். பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் வேளாண் பயிர்கள் விதைப்பதற்கு தென்மேற்கு பருவமழை பெரும் சவாலாக உள்ளது. எனவே இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு வறண்ட ஆடிப்பெருக்காக காணப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒகேனக்கல் பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார் – August 3, 2023
தருமபுரி மாவட்டம், பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது, உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதம், வெள்ள அபாய காலங்களிலும் தடுப்பது உள்ளிட்ட ஒத்திகை மேற்கொள்ள ஒகேனக்கல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றுப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழம் தெரியாமலும், சுழலில் சிக்கியும் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாவட்டங்களில் இருந்து இப்பகுதியில் வருவதற்குள் பாதிக்கப்படும் நபர் உயிரிழக்க நேரிடுகிறது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டும், மேலும் அந்தந்த மாவட்டங்களிலேயே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக இன்று பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்களுக்கு நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, ஆற்று நீரின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும், ஆற்றில் அதிகளவு நீர் வரும்போது சாதாரண படகுகளை இயக்கும் முறை மற்றும் விசைப்படகுகள் உள்ளிட்டவற்றை இயக்கி பேரிடர்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் வைத்தியலிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் தருமபுரி மாவட்ட காவல் துறையிலிருந்து பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-வது நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் உடன் சேலம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஊராட்சி மன்ற தலைவர்கள் & உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர்கள்,உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி 02-08-2023: தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் லால்வாணி உத்தரவின் பேரில் தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுஜாதா அவர்களின் மேற்பார்வையில் தர்மபுரி வட்டார உணவு பாதுகாப்பு துறை மேற்பார்வையாளர் குமணன் தலைமையில், இளநிலை உணவு பகுப்பாய்வாளர்கள் நந்தினி, ஜெயகாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தின் மூலம் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டீத்தூளில் செய்யும் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும், சமையல் எண்ணெய் மற்றும் மாவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் குறித்தும் எளிய முறையில் பொதுமக்களுக்கு செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.